உரிமையாளர் உயிரிழப்பு : 15 நாட்களாக அன்ன ஆகாரம் இன்றி வாடும் ஐந்தறிவு ஜீவன்!!

37

இந்தியா ஒடிசா மாநிலம் குசலிங்கான் கிராமத்தில், தனது உரிமையாளர் உயிரிழந்த சோகத்தில் மாடு ஒன்று 15 நாட்களாக உணவு, தண்ணீர் அருந்தாமல் அழுதுகொண்டே இருக்கும் உருக்கமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மாட்டை விற்பனை செய்ய முயன்றபோது, எதிர்பாராதவிதமாக மாடு தாக்கியதில் அதன் உரிமையாளர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அந்த மாடு உணவு மற்றும் தண்ணீர் எதையும் உட்கொள்ளாமல், கண்ணீருடன் தனது உரிமையாளரின் நினைவாகவே அதே இடத்தில் சுற்றித் திரிவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உரிமையாளரின் உயிரிழப்பால் அன்ன ஆகாரம் இன்றி வாடும் ஐந்தறிவு ஜீவனின் செயல் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வரு கின்றது