வரதட்சணையாக Black Scorpio கேட்ட மாப்பிள்ளை : பெண்வீட்டார் கொடுத்த அதிர்ச்சி!!

725

இந்தியாவில் திருமணத்திற்கு முன்னதாக மாப்பிள்ளை தரப்பில் மாபிள்ளைக்கு வரதட்சணையாக ஒரு “Black Scorpio” சிற்றுந்து வேண்டும் என மாப்பிள்ளை ஒற்றைக்காலில் நின்றுள்ளார்.

பெண் வீட்டாரும் “சரி, பார்த்துக்கொள்ளலாம்” என கூறியுள்ளனர். இந்நிலையில் , மாப்பிள்ளை பெரும் கனவுகளோடு திருமண மேடை ஏறியுள்ளார்.

முகூர்த்த நேரத்தில் சிற்றுந்து சாவி கைக்கு வரும் என எதிர்பார்த்திருந்த மாப்பிள்ளைக்கு, பெண் வீட்டார் ஒரு பெரிய பார்சலை வழங்கியுள்ளனர். ஆவலோடு அதனைப் பிரித்த மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே இருந்தது அவர் ஆசைப்பட்ட அதே கருப்பு நிற ஸ்கார்பியோதான்.

ஆனால், அது சாலையில் ஓடும் சிற்றுந்து அல்ல, தரையில் ஓடும் விளையாட்டு பொம்மை சிற்றுந்தாகும். நீ கேட்டது கிடைச்சிருச்சு மாப்பிள்ளே என்பது போல பெண் வீட்டார் அந்தப் பொம்மை சிற்றுந்தை வழங்கிய புகைப்படம் இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.