15 வயது சிறுவனிடம் காரை ஓட்டக் கொடுத்தவரின் உயிரை பறித்த சோகம்!!

722

மாவனெல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவனெல்லை – அளுத்நுவர வீதியின் அழுபத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த முதியவர் தனது காரை ஓட்டிச் சென்று, வீட்டின் அருகே வந்ததும் அதிலிருந்த 15 வயது சிறுவனிடம் காரை ஓட்டக் கொடுத்துள்ளார்.

பின்னர் அவர் காரின் முன்பக்கமாக வீதியை கடக்க முயன்றபோது, கார் முன்னோக்கி நகர்ந்ததால் அவர் மீது கார் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் மாவனெல்லை பகுதியைச் சேர்ந்த 86 வயதுடைய முதியவர் என தெரியவந்துள்ளது.

விபத்தின்போது காரை செலுத்திய 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.