
முல்லைத்தீவு – வள்ளுவர்புரம், விசுவமடு பகுதியில் ஆசிரியர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று(08.05.2026) இடம்பெற்றுள்ளது.
வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சி, வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஆசிரியர் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




