இன்ஸ்டகிராம் காதலால் விபரீதம் : பெண்ணின் நெருக்கடியால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

14

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா அருகே இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட காதலால் இளைஞர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சோகமான சம்பவம் நடந்துள்ளது.

திப்பசாமி (28) என்ற வாலிபருக்கும், ஏற்கனவே திருமணமாகி கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த பிரியங்கா என்ற பெண்ணுக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இது காதலாக மாறவே, இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் தங்கி வாழ்ந்து வந்துள்ளனர்.

ஒன்றாக வாழ்ந்து வந்த சூழலில், குடும்பச் செலவுகளைக் கவனிப்பதில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

பிரியங்கா தனது ஆடம்பரச் செலவுகளுக்காகத் திப்பசாமியைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும், பணத்திற்காக அவருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

பெண்ணின் இந்தத் தொடர் தொந்தரவுகளையும் பொருளாதார நெருக்கடியையும் சமாளிக்க முடியாமல் திப்பசாமி திணறி வந்துள்ளார்.

இதனால் கடும் மனவேதனை அடைந்த திப்பசாமி, வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டதாகக் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்குத் தூண்டியதாகப் பிரியங்காவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் ஏற்படும் அறிமுகங்கள் எத்தகைய விபரீதங்களை உண்டாக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக அமைந்துள்ளது.