சாலை விபத்தில் நடிகர் பரத் காந்த் உயிரிழப்பு!!

10

சாலை விபத்தில் நடிகர் பரத்காந்த் உயிரிழந்துள்ளர். ஆந்திராவை சேர்ந்த 31 வயதான பரத்காந்த், டெனென்ட் ‘ மற்றும் ‘கிராமம்’ உள்ளிட்ட தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இவரை சுமார் 40,000 பேர் பின்தொடர்கின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு தனது நண்பரான ஒளிப்பதிவாளர் சாய் திரிலோக் என்பவருடன் அடிபட்லா அருகே உள்ள வெளிவட்டச் சாலையில் (ORR) காரில் பயணித்துள்ளார்.

காரை ஒட்டிய பரத்காந்த், கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி, விபத்தில் சிக்கியுள்ளார். இதில், காரில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்த பரத்காந்த் மற்றும் சாய் திரிலோக்கிற்கு தெலுங்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.