
அரசாங்கத்திற்கான வாகனங்கள் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கச் செலவினங்களைக் கட்டுப்படுத்த இத்தகைய முடிவு எடுக்கப்பட வேண்டும்.
குறிப்பாக, மே மாதத்தில் மட்டும் எரிபொருள் இறக்குமதிக்காக அரசாங்கம் 550 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட வேண்டியிருந்தது. அதன் விளைவாக, எரிபொருள் நுகர்வு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும்.
எரிபொருளுக்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக தேவையற்ற செலவினங்களைக் குறைப்பது அவசியம்.
அதன்படி, வரும் காலத்தில் அரசாங்கத்திற்கான வாகனங்கள் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.




