அரச பேருந்தின் பின்னால் தறிகெட்டு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!!

26

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியபாலம் பகுதியில் இன்று (19) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் காயமடைந்துள்ளார்.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த அரச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தோப்பூரிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த அரச பேருந்தின் பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பேருந்தின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.