காயமடைந்த லசித் மலிங்க : 4 மாதங்கள் விளையாட முடியாது!!

616

Malinga

இலங்கை கிரிக்கட் வீரர் லசித் மாலிங்க 16 வாரங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அவரது இடது காலில் ஏற்பட்டுள்ள உபாதைக்கான சத்திரசிகிச்சையை மேற்கொள்ள அவர் இன்று அவுஸ்திரேலியாவுக்கு செல்கிறார்.

இதன்காரணமாக 2015 உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னரே அவரால் பயிற்சிகளில் ஈடுபட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 2015 பெப்ரவரி 14ஆம் திகதி அவுஸ்திரேலியாவிலும் நியூஸிலாந்திலும் ஆரம்பமாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.