
நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரூபாவின் பெறுமதி கடுமையாக வலுவிழந்து, டொலரின் பெறுமதி வேகமாக உயர்ந்து வருவதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், எதிர்காலத்தில் இறக்குமதிப் பொருட்கள் பலவற்றின் விலைகள் அதிகரிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் பாரிய அதிகரிப்பை எதிர்நோக்கக் கூடும் என்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சீனி, பருப்பு, அரிசி உள்ளிட்ட பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கக் கூடும் என்று அந்த எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




