யாழில் கோர விபத்து : இரு இளைஞர்கள் காயம்!!

135

யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இன்று முற்பகல் கோர விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மருதங்கேணியில் இருந்து கட்டைக்காடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் விபத்துக்குள்ளானது.

விபத்தில் காயமடைந்த இரு காவாலிகளை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருதங்கேணி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த காவாலிகள் கட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.