யாழில் பயிற்சியை முடித்து வெளியேறிய இராணுவத்தினர்!!

600

யாழ். மாவட்டத்தில் இருந்து இராணுவத்தில் இணைந்து கொண்டவர்கள் தமது ஆரம்ப இராணுவ பயிற்சி நெறிகளை முடித்துக்கொண்டு நேற்று வெளியேறியுள்ளனர்.

காங்கேசன்துறை படைத்தளத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில், பொறியியல் படையணி, பொது படையணி மற்றும் பெண்கள் படையணிகளில், 500 இராணுவ வீர, வீராங்கனைகள் தமது 4 மாத கால இராணுவ ஆரம்ப பயிற்சியினை முடித்து வெளியேறினர்.

பயிற்சியை முடித்து வெளியேறிய இராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதையை கொழும்பு படைத்தலைமையகத்தின் படை அதிகாரி மேஜர் ஜெனரல் அமங்கபொல மற்றும் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.

இராணுவ பயிற்சியின் போது திறமையாக செயற்பட்ட இராணுவ வீர, வீராங்கனைகள் 8 பேருக்கு வெற்றிக்கிண்ணம் வழங்கப்பட்டதுடன் இராணுவத்தில் இணைந்து கொண்டவர்களின் பெற்றோர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து நாய்களின் சாகச நிகழ்ச்சி, இராணுவ பொலிசாரின் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி , பொறியியல் பிரிவின் சாகச நிகழ்ச்சி மற்றும் பெண்களின் காராத்தே கண்காட்சி என்பனவும் நடைபெற்றன.

1 2 3 4 5