
நவீன தொழில்நுட்ப உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளின் பயன்பாடு அத்தியாவசியமாகி வரும் நிலையில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்காக பிரத்தியேகமான “ஸ்மார்ட் பணியாளர்களுக்கான AI பயிற்சி முகாம்”ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள IDM Nations Campus International வளாகத்தில் காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை இப்பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டி நிறைந்த வேலைச் சூழலில், வேலைப்பளுவை குறைத்து, நேரத்தை மிச்சப்படுத்தி, அன்றாட பணிகளை எவ்வாறு புத்திசாலித்தனமாகவும் வேகமாகவும் கையாள்வது என்பதை கற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க செய்முறைப் பயிற்சியாக (100% Hands-on Training) அமையவுள்ள இந்த முகாமில், பங்கேற்பாளர்கள் தொழில்முறை மற்றும் அன்றாட பணிகளில் பல்வேறு AI கருவிகளை (AI Tools) சரியான முறையில் கையாளுதல் , நேரத்தை மிச்சப்படுத்தி, வேலைகளில் உற்பத்தித்திறனை (Productivity) பல மடங்கு அதிகரிப்பதற்கான நவீன உத்திகள் , AI கருவிகளைப் பயன்படுத்தும் போது பொதுவாக ஏற்படும் தவறுகள் மற்றும் அவற்றைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள் போன்ற பல முக்கிய விடயங்களை கற்றுக்கொள்ள முடியும்

இப்பயிற்சி முகாமினை மென்பொருள் பொறியாளரும், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) ஆலோசகருமான திரு.தனுராஜ் சிவகுமார் வழிநடத்தவுள்ளார்.
துறைசார் நிபுணரின் வழிகாட்டலில் நடைபெறும் இப்பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்குப் பயன்படக்கூடிய தொழில்முறை சான்றிதழ் (Professional Certificate) வழங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்பயிற்சியில் கலந்துகொள்வதற்கான பதிவு கட்டணமாக ரூபாய் 1000 மாத்திரம் அறவிடப்படும். இதற்கான இருக்கைகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (Limited Seats) ஒதுக்கப்பட்டுள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் முன்கூட்டியே தங்களது பதிவுகளை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலதிக விபரங்கள் மற்றும் பதிவுகளுக்கு :
தொலைபேசி எண்: 0760970955
வாட்ஸ்அப் தொடர்பு இங்கே கிளிக் செய்யவும்..
மாறிவரும் டிஜிட்டல் உலகிற்கு ஏற்ப தங்களது திறமைகளை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி, புத்திசாலித்தனமாக வேலை செய்ய விரும்பும் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த அரச மற்றும் தனியார் துறை பணியாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் இளைஞர்கள் இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.



