காதலியை 20க்கும் மேற்பட்ட முறை குத்திய நபர்!!

6

மொஹாலியில் சக பெண் ஊழியரை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் வியாழக்கிழமை இரவு 7.40 மணி அளவில் தனியார் அலுவலகத்தில் பெண் ஊழியர் ஒருவரை சக ஊழியர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரி என்று அழைக்கப்படும் ஹிரிவிந்தர் மான்(Harvinder Mann) என்ற நபர், நேற்று தனது சக பெண் ஊழியரான டிம்பிள்(Dimple) பணிபுரிந்து வந்த மேஜைக்கு சென்று பின்புறத்தில் இருந்து கழுத்தில் கத்தியால் பல முறை குத்தியுள்ளார்.

தப்பிச் செல்ல முயன்ற டிம்பிளின் தலைமுடியை இழுத்து 20-க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தியுள்ளார்.

பின்னர், தன்னுடைய மேஜைக்கு திரும்பிய ஹரி அதே கத்தியால் தன்னுடைய கழுத்தை அறுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இருவரையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக டிம்பிள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டார். குற்றவாளியான ஹரி தற்போது கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பொலிஸார் விசாரணையில், பாதிக்கப்பட்ட இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக அந்த பகுதியில் அமைந்துள்ள பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும், இருவரும் காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹரியின் இந்த கொடூர செயலுக்கு காதல் முறிவு தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.