தமிழர் பகுதியில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட மூன்று வாகனங்கள்!!

21

திருகோணமலை – கண்டி பிரதான வீதியின் முள்ளிப்பொத்தானை 96 வைத்தியசாலைக்கு முன்னால் வியாழக்கிழமை (04) அன்று மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான (SLTB) பேருந்து, முச்சக்கர வண்டி மற்றும் பெரிய கொள்கலன் லொறி ஆகிய மூன்று வாகனங்களும் எதிர்பாராதவிதமாக ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் வாகனங்கள் பலத்த சேதமடைந்த போதிலும், வாகனங்களில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.