யாழில் குடும்பப் பெண் எடுத்த விபரீத முடிவு : கணவர் தப்பியோட்டம்!!

141

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியில் கணவரின் கொடுர தாக்குதலை தாங்கிக் கொள்ளா முடியாத மனைவி மண்ணெண்ணை ஊற்றி தீமுட்டியுள்ளார். 3 பிள்ளைகளின் தாயானா ஒருவரே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

நீர்வேலிப் பகுதியில் வசித்துவந்த குறித்த குடும்பப் பெண், கணவரால் தொடர்ந்து சித்திரவதைகளை அனுபவித்த நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் 3 தடவை கணவருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

கோப்பாய் பொலிஸார் அவ்விடயம் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், யாழ்ப்பாணம் தலமைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த்துள்ளார்.

எனினும் பொலிஸ் தரப்பினரால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நேற்று முந்தினம் கணவரின் தாக்குதலை தாங்காது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ மூட்டியுள்ளார்.

சம்பவத்தின் போது வீட்டில் இருந்த கணவர், தீயை அணைக்காமல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பெண்ணின் தாய் தீயை அணைத்து, அவரை சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

வைத்தியசாலையில் திவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.