தென்னிலங்கையில் பேஸ்புக் விருந்து முற்றுகை : பெண்கள் உட்பட 25 பேர் கைது!!

93

அம்பலாங்கொட, போனதூவ பகுதியில் பேஸ்புக் விருந்து ஒன்று முற்றுகையிடப்பட்டு, 3 பெண்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட முற்றுகையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 225 மில்லிகிராம் கொகெய்ன், 8 கிராம் 125 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 2 கிராம் 400 மில்லிகிராம் கஞ்சா மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் 18 முதல் 44 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் படபொல, பலபிட்டிய, ஹோமாகம, பேருவளை, அம்பலாங்கொடை, மீடியாகொட, வத்துகெதர மற்றும் அஹுங்கல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.