24வருடங்களின் பின்னர் இன்று யாழிற்கு உத்தியோகபூர்வ புகையிரத சேவை!!

388

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 24 வருடங்களாக யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவைகள் பாதிப்படைந்திருந்தன. புகையிரத பாதைகளும் முற்றாக சேதமாகி இருந்தன.

உள்ளநாட்டு யுத்தம் கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்ததை அடுத்து யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவையினை ஆரம்பிக்கும் நோக்குடன் சேதமான புகையிரத பாதைகள் மற்றும் புகையிரத நிலையங்கள் அனைத்தும் துரித கதியில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

புகையிரத சேவைகளை ஆரம்பிப்பதற்கான புனரமைப்பு பணிகள் பெருமளவில் பூர்த்தியடைந்துள்ள நிலையில் நேற்று முதல் யாழ் தேவி பரீட்சார்த்த புகையிரத சேவையில் ஈடுபட்டுள்ளது.

எதிர்வரும் மாதம் 13ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே யாழ்ப்பாணத்திற்கான யாழ்.தேவி புகையிரத சேவை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இப் புகையிரத சேவையானது மணித்தியலத்திற்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் தனது சேவையை வழங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

1 2 3 4 5 6 7 8