
புதிய இணைப்பு : கொழும்பு – தலவத்துகொட பகுதியில் உள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ விபத்தில் காயமடைந்த நான்கு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர்களில் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை (09) குறித்த உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், தீயை அணைப்பதற்காக கோட்டை மாநகர சபைக்குச் சொந்தமான 03 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், எரிவாயு கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
முதலாம் இணைப்பு : கொழும்பு – தலவத்துகொட பகுதியில் உள்ள உணவகமொன்றில் இன்று காலை (09) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக நான்கு பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் எரிவாயு கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இருப்பினும், தீ விபத்துக்கான உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், தலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




