வீட்டிலேயே நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கிய இளைஞர்!!

623

சுவீடன் நாட்டில் இளைஞர் ஒருவர் தன் வீட்டிலேயே நீர்மூழ்கிக் கப்பல் உருவாக்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு சுவீடனின் ரொபட்போர்ஸ் பகுதியை சேர்ந்த எரிக் வெஸ்டர்பர்க் (33) என்ற இளைஞர், கடந்த இரண்டு ஆண்டு காலமாக நீர்முழ்கி கப்பலை உருவாக்க சிறிது, சிறிதாக பொருட்களைச் சேர்த்து வந்துள்ளார்.

சுமார் 6 மீற்றர் நீளமும், 8,500 கிலோ எடை கொண்ட இந்த நீர்முழ்கி கப்பலை கடந்த 2007ம் ஆண்டு இவர் உருவாக்கியுள்ளார். “இஸபெல்லி’ (Isabelle) எனப் பெயரிடப்பட்ட இந்த நீர்மூழ்கிக் கப்பல், சுவீடனின் பல பகுதிகளில் காட்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதனை விற்பனை செய்ய தீர்மானித்த இவர் இணையதளத்தில் விளம்பரம் அளித்துள்ளார். இதை உலகின் பல பகுதிகளிலிருந்தும் பார்த்த பலர் பிரம்மிப்பில் ஆழ்ந்ததுடன், வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர்.

இதனையடுத்து ஏலத்திற்கு வந்த இந்த நீர்முழ்கி கப்பல், சுமார் 98,500 டொலருக்கு (59 லட்சத்துக்கு) விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து அவர் கூறுகையில், சொந்தமாக ஒரு நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்க நினைத்து அதற்கான தொழில்நுட்ப வரைபடங்களை இணையதளத்தில் தேடினேன் என்றும், அது கிடைக்காததால், நானே எனது அறிவைக் கொண்டு இதனை உருவாக்கினேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு சுமார் 3,500 மணி நேரம் உழைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

11 12 13