
வவுனியா குடியிருப்பை பிறப்பிடமாகவும் குருமன்காட்டை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.சசிகலா வெனிசியஸ் அவர்கள் 09.06.2026 செவ்வாய்க்கிழமையன்று அமரத்துவம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களாகிய தனபாலசிங்கம் வெற்றிநாயகி (சோதி) அவர்களின் சிரேஷ்ட புதல்வியும், காலம்சென்ற அந்தோனிப்பிள்ளை இராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு மருமகளும், திரு.வெனிசியஸ் (இளைப்பாறிய உதவி நிதியாளர், வவுனியா பல்கலைக்கழகம்) அவர்களின் அன்புமிகு மனைவியும்,
கனிஸ்ரன் (இலங்கை சட்டக்கல்லூரி இறுதி ஆண்டு, EDI) மற்றும் டிலான் (பொறியியல் பீடம், மொறட்டுவ பல்கலைக்கழகம்) அவர்களின் பாசமிகு தாயாரும், சசிரேகாவின் (வவுனியா இந்துக்கல்லூரி நடன ஆசிரியர்) அருமை அக்காவும்,
கெவின் (ORHAN), ஆன்செரோமி (வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி), சரோன் (வவுனியா மத்திய மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புமிகு பெரிய தாயாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று வியாழக்கிழமை (11.06.2026) அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரின் குருமன்காடு வாசஸ்தலத்திலிருந்து நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்பட்டு இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
மகன் 0768912251
No 49/12 A, 1 ஆம் ஒழுங்கை,
கோவில் வீதி,
குருமன்காடு,
வவுனியா




