இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

110

இலங்கை வாழ் மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் வெப்பநிலையை அதிகரித்து, கடுமையான வானிலை நிலவக் காரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படும் எல் நினோ நிலை, தற்போது உருவாகத் தொடங்கியுள்ளது.

தென்மேற்கு பிராந்தியத்தில் மழைவீழ்ச்சி குறைவடைவதற்கும் இந்த எல் நினோ நிலைமை வழிவகுத்துள்ளதாக திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவின் இயக்குநரான மெரில் மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது நிலவும் மழைக்காலநிலை எதிர்வரும் ஜுலை மாதத்திலிருந்து ஓரளவுக்குக் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எல் நினோ நிலைமை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இனிவரும் நாட்களில் வெளியிடப்படும் அறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்த நிலைமைக்கு முகங்கொடுப்பதற்காக நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் காலநிலைக்கு ஏற்படும் தாக்கத்தைக் கருதினால், தென்மேற்கு பிராந்தியத்தில் மழைவீழ்ச்சி குறைவடைவதற்கு எல் நினோ நிலைமை காரணமாக அமையும்.

எவ்வாறாயினும், இந்த எல் நினோ நிலைமையுடன் ஜுலை, ஒகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சியில் ஓரளவு குறைவை நாம் எதிர்பார்க்கிறோம்.

ஏனெனில், தற்போது எல் நினோ நிலைமையின் வளர்ச்சி ஆரம்பமாகியுள்ளது. இதனால், வரவிருக்கும் காலநிலை அறிவிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு விசேடமாக நினைவூட்டுகிறேன்.

எதிர்வரும் காலநிலையின் கீழ் மழைவீழ்ச்சி குறைவடைவதுடன் வெப்பநிலையும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.