100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து!!

204

அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, கரோலினா பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று (15) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கரவண்டி பிரதான வீதியை விட்டு விலகி செங்குத்தான சரிவு ஒன்றில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

பொலிஸார் விசாரணை

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தலவாக்கலை நோக்கிச்சென்றுகொண்டிருந்த போதே, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இடம் பெற்றபோது, வெளிநாட்டிலிருந்து வருகை தந்த நபர் ஒருவரும் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.

இந்த விபத்தினால் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், காயமடைந்த சாரதி உடனடியாக வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.