கொழும்பில் இருந்து சென்ற பேருந்தில் ஏற்பட்ட அனர்த்தம் : 40 உயிர்களை காப்பாற்றிய சாரதி!!

179

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று பாரிய விபத்தில் இருந்து தப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளைக்கு இடைப்பட்ட வீதியில் நேற்று அதிகாலை 4.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

திடீரென பேருந்தின் பிரேக் செயலிழந்ததால் ஏற்படவிருந்த பாரிய விபத்து, பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேக் செயலிழந்ததை உணர்ந்த ஓட்டுநர் பேருந்தை வீதியின் வலது பக்கமாக மேல் நோக்கிய பாதையில் திருப்பி விபத்தைத் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவ்வாறு செய்ததன் மூலம் பேருந்தில் இருந்த 40 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. எனினும் அந்த இடத்தில் இருந்த பௌத்த விகாரைக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், புத்தர் சிலைக்கு எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.