தங்கத்தின் விலையில் சடுதியாக தலைகீழ் மாற்றம்!!

123

இலங்கையில் இன்று (17.06.2026) நண்பகலுக்கு முன் மாற்றமின்றி தொடர்ந்த தங்கத்தின் விலையில் நண்பகலின் பின் சிறிய மாற்றம் பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்க பவுண் ஒன்று 1000 ரூபாயால் விலை குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தற்போதைய சந்தை நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 393,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 361,500 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கிராம் அடிப்படையில், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 49,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 45,188 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.