இலங்கையில் தங்கத்தின் விலையில் பதிவாகியுள்ள மாற்றம் – இன்றைய விலை நிலவரம்!!

28

உள்நாட்டு சந்தையில் இன்றைய தினம் (18.06.2026) தங்க விலையில் சிறிய மாற்றம் பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்க பவுண் ஒன்று 1000 ரூபாயால் குறைந்துள்ளதாக தெரியவருகிறது.

தற்போதைய சந்தை நிலவரப்படி, 24 கரட் தங்க பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 360,600 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம் அடிப்படையில், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 49,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 45,075 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.