யாழ் – கண்டி வீதியில் கோர விபத்து – ஆசிரியை ஸ்தலத்தில் பலி!!

135

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் பூனாவை, கும்புல்கொல்லேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியை உயிரிழந்துள்ளார்.

இன்று காலை கண்டியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆசிரியை, பேருந்தின் பின் சக்கரத்தினுள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பூனாவை, கல்கந்தேகம வித்தியாலயத்தில் ஆசிரியையாகப் பணியாற்றிய 56 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பூனாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.