ரஜினி, கமல், அஜித், விஜய் அனைவரையும் பின்னுக்குத் தள்ளிய விக்ரம்!!

426

Vikram

கடந்த சில வருடங்களாக விக்ரம் நடித்த எந்த படங்களும் சரியாக போகவில்லை. அப்படியிருக்க தற்போது இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் ஐ படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு.

இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் ஷங்கரும், சமீபத்தில் வெளிவந்த டீசரும் தான். இந்த டீசர் இதுவரை வந்த அனைத்து தமிழ் படத்தின் ட்ரைலர் மற்றும் டீசர் ஹிட்ஸையும் யு-டியுபில் பின்னுக்கு தள்ளியது.

தற்போது வரை ஐ படத்தின் டீசர் 50 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது. இதன் மூலம் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றோர்களின் சாதனையை விக்ரம் ஒரே படத்தில் முறியடித்துள்ளார்.