
நாட்டில் தங்கத்தின் விலையில் இன்று இரண்டு முறை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒன்று ரூ. 391,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை 9,000 ரூபாயால் குறைந்தது.
அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒன்று ரூ. 382,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இரண்டாவது முறையாக தங்கவிலை 2,000 ரூபாயால் குறைந்துள்ளது. அதற்கமைய தற்போதைய சந்தை நிலவரங்களின்படி
தங்கத்தின் புதிய விலை விபரங்கள்
24 கரட் தங்கம் (ஒரு பவுண்) ரூ. 380,000
22 கரட் தங்கம் (ஒரு பவுண்) ரூ. 349,600 கிராம்
24 கரட் தங்கம் (1 கிராம்) ரூ. 47,500
22 கரட் தங்கம் (1 கிராம்) ரூ. 43,700
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலைகளில் தொடர்ந்தும் மாற்றங்கள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




