சாதாரண தரப்பரீட்சையில் முல்லைத்தீவு மண்ணுக்கு பெருமைச் சேர்த்த மாணவி!!

71

சாதாரண தரப்பரீட்சையில் முல்லைத்தீவு பிரதேசத்தை சேர்ந்த மாணவி நிசாந்தி 9A பெறுபேறுகளை பெற்று மண்ணின் சாதனையாளராக உருவெடுத்துள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான சாதாரண பரீட்சை பெறுபேறுகள் நேற்று(19.06.2026) இரவு வெளியாகிய நிலையில், தமிழர் பகுதிகளில் பல மாணவ மாணவிகள் தங்களின் திறமையை வெளிக்காட்டி சாதனையாளர்களாக மாறியுள்ளனர்.

இதற்கமைய, முல்லைத்தீவு கூழாமுறிப்பு அ.த.க பாடசாலையின் மாணவி நிசாந்தி க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9 பாடங்களிலும் 9A பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர், 2009 இறுதி யுத்தத்தில் பிறந்த குழந்தை என்றும், தரம் 5 படிக்கும் பொழுதே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒரு மூலையில் போதுமான அளவு வசதிகளற்ற பாடசாலையொன்றில் படித்த மாணவியின் இந்த சாதனை அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.