இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சடுதியான மாற்றம்!!

13

இலங்கையில் இன்று (20.06.2026) தங்க விலை அதிகரித்துள்ளது என அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (19.06.2026) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 380,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது 2000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 382,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல்,நேற்று 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 349,600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 1900 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 351,500 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,937 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.