வீட்டில் சிசிடிவி கமெராக்களை பொருத்திய கணவன் கண்ட அதிர்ச்சிக் காட்சி!!

11

ஹோமியோபதி மருத்துவர் ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையான நிலையில், அவரை கண்காணிக்க தன் வீட்டில் சிசிடிவி கமெராக்களை பொருத்தியுள்ளார் அவரது மகன்.

ஆனால், அந்த கமெரா காட்சிகளில், தன் தந்தை தன் மனைவியால் கொல்லப்படுவதை நேரடியாக காண நேர்ந்ததால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார் அவர்.

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ராஞ்ச்சி நகரில் வழ்ந்துவரும் Dr குப்தா (Dr KP Gupta), ஒரு பிரபல ஹோமியோபதி மருத்துவர் ஆவார். திடீரென அவரை பக்கவாதம் தாக்கியதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக படுத்த படுக்கையாக உள்ளார் அவர்.

ஆகவே, தன் தந்தையின் உடல் நிலையை பணியிலிருந்தவண்ணமே கண்காணிப்பதற்காக வீட்டில் சிசிடிவி கமெராக்களை பொருத்தியுள்ளார் Dr குப்தாவின் மகனான சௌரப்.

சௌரப் கடை ஒன்றை நடத்திவரும் நிலையில், சனிக்கிழமை மதியம், சௌரபின் தாய் தன் மகனுக்கு மதிய உணவு கொடுப்பதற்காக அவரது கடைக்குச் சென்றுள்ளார்.

அப்போது கமெரா காட்சிகளை பார்த்துக்கொண்டிருந்த சௌரப், அதிர்ச்சியை உருவாக்கும் ஒரு சம்பவத்தைக் கண்டுள்ளார்.

ஆம், சௌரபின் மனைவியான நிகிதா, தன் மாமனார் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி அவரைக் கொல்ல முயன்றதைக் கண்ட சௌரப், உடனடியாக வீட்டுக்கு விரைந்துள்ளார்.

ஆனால், ஏற்கனவே எல்லாம் முடிந்துவிட்டிருந்திருக்கிறது. ஆம், சௌரப் வீட்டுக்குத் திரும்பும்போது, ஏற்கனவே Dr குப்தாவின் உயிர் பிரிந்துள்ளது.

தன் தந்தையை, தன் மனைவியான நிகிதாதான் கொலை செய்துவிட்டதாகவும், சிசிடிவி கமெராக்களை அவர் சேதப்படுத்தியதாகவும், தன் தந்தையைக் கொல்ல பயன்படுத்திய தலையணையை அவர் எங்கோ எடுத்துச் சென்றதாகவும் சௌரப் பொலிசில் புகாரளித்துள்ளார்.

நிகிதாவுக்கும் அவரது மாமனாருக்கும் இடையே ஏற்கனவே பல விடயங்களில் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.

பொலிசார் இரத்தம் படிந்த அந்த தலையணையை மீட்டுள்ளார்கள். ஆனால், சிசிடிவி காட்சிகளில், நிகிதா தன் மாமனாரின் அறைக்குள் செல்லும் காட்சியும், மீண்டும் வெளியேறும் காட்சியும்தான் பதிவாகியுள்ளன.

பொலிசார் நிகிதாவை கைது செய்துள்ள நிலையில், உண்மையாகவே நிகிதா தன் மாமனாரை கொலை செய்தாரா, அல்லது, ஏற்கனவே பல உடல் நல பாதிப்புகள் கொண்டிருந்த Dr குப்தா வேறு காரணங்களால் உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.