வவுனியா சாந்தசோலையில் பிரதேச சபை உறுப்பினர் பிரசாத் தலைமையில் கலைவாணி சனசமூக நிலையம் உதயம்!!

624

வவுனியா சாந்தசோலைக் கிராமத்தில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் நோக்கோடு நேற்று முன்தினம் (21.09) வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை உறுப்பினர் திரு.இ.பிரசாத் தலைமையில் கலைவாணி சனசமூக நிலையம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இன் நிகழ்வில் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை ஊழியர்கள் உட்பட பிரதேச மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

அடுத்த பிரதேச சபைக் கூட்டத்தில் இச் சனசமூக நிலைய தெரிவு சம்பந்தமாக பிரதேச சபையின் அனுமதியை பெறவுள்ளதாகவும், அதன் பின்னர் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை இச் சனசமூக நிலையம் ஊடாக மேற்கொள்ளவுள்ளதாகவும் திரு.பிரசாத் அவர்கள் எமக்குத் தெரிவித்தார்.

20140920_103144 20140920_103330 20140920_103641 20140920_104028