பல்கலைக்கழக மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு : நண்பர்களுக்கு அனுப்பிய இறுதி குறுஞ்செய்தி!!

128

ருஹுணு பல்கலைக்கழகத்தைச் (Ruhuna University) சேர்ந்த 23 வயதுடைய மாணவி சடலி (Sadali) டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

பல்கலைக்கழகச் சுற்றுப்பயணம் மற்றும் கள விஜயங்கள் (Field visit) செல்லவிருந்த நிலையில், டெங்கு காய்ச்சல் காரணமாக செல்லவிலை என கூறப்படுகின்றது.

அவர் தனது நண்பர்களுக்கு அனுப்பிய இறுதி வாட்ஸ்அப் செய்தியில் தான் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், “நான் இறக்காவிட்டால் கண்டிப்பாக உங்களைப் பார்க்க வருவேன் நண்பர்களே” என்றும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந் நிலையில் மாணவியின் எதிர்பாராத இந்த மரணம் அவரது குடும்பத்தினரிடையேயும், சக பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளை டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாகக் காணப்படும் 06 மாகாணங்களில், இன்று (24) முதல் வரும் 26ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் ஒன்று செயற்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் வேகமாக அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகள், உள்ளூராட்சி அமைப்புகள் மற்றும் தொடர்புடைய தரப்பினரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.