ஏறிய வேகத்தில் சரியும் தங்கத்தின் விலை : இன்று பதிவாகியுள்ள புதிய நிலவரம்!!

186

இலங்கையில் இன்றைய தினம் (25.06.2026) தங்க விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

24 கரட் தங்க பவுண் ஒன்று நேற்றைய தினம் 380,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டிருந்து. இந்த நிலையில் இன்றைய தினம் 4000 ரூபாயால் வீழ்ச்சியடைந்து 376,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல்,நேற்று 22 கரட் தங்கம் ஒரு பவுண் 349,600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 3600 ரூபாயால் குறைக்கப்பட்டு 346,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,250 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.