எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!!

555

எரிபொருள் விலைகளில் எப்போது மாற்றம் செய்யப்படும் என்று தற்போதைக்குக் கூற முடியாது வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (25.06.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறையும் சந்தர்ப்பங்களில், அந்த விலைக்குறைப்பின் பலனை நிச்சயமாக நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். டீசலுக்கு 100 ரூபாவும், பெற்றோலுக்கு 20 ரூபாவும் மானியம் வழங்கப்படுகிறது.

இந்த எரிபொருள் மானியம் அனைவருக்கும் சமமான முறையில் வழங்கப்படுவதில்லை.

தற்போது மானியங்களுக்காக அமைச்சரவையினால் 57 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இந்த தொகை இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை.

எரிபொருள் விலைகளில் எப்போது மாற்றம் செய்யப்படும் என்று தற்போதைக்குக் கூற முடியாது. உலகச் சந்தையின் விலை நிலவரங்களுக்கு அமைவாகவே அது தீர்மானிக்கப்படும். கடந்த மார்ச் மாதம் முதல் எரிபொருள் விலைகள் அதிகரித்து வந்துள்ளது.

சர்வதேச சந்தையில் விலை அதிகரித்தமையினாலேயே உள்நாட்டுச் சந்தையிலும் விலை அதிகரித்தது.

எனினும், சர்வதேச சந்தையில் விலை வீழ்ச்சியடையும் சந்தர்ப்பத்தில், அதன் நன்மையை நுகர்வோருக்கு வழங்க நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.