வருங்கால கணவனுக்கு செய்த துரோகம் : அவளையும் கீழே தள்ளி விட வேண்டும் : பெற்றோர் கோரிக்கை!!

24

புனே 26 வயதான கேத்தன் எனும் இளம் தொழிலதிபர் திருமணம் செய்யவிருந்த யுவதியால் திட்டமிட்டு கோலிசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலைக்கு காரணமான யுவதியையும் அதே கோட்டையிலிருந்து கீழே தள்ளி விட வேண்டும் பெண்ணின் தந்தை கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா புனேவில் 26 வயதான கேத்தன் அகர்வால் என்பவருக்கு சியா கோயல் என்பவருடன் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணத்திற்காக பதினேழு கோடி செலவு செய்து ஒரு பிரமாண்ட அரண்மனையில் திருமணம் செய்ய கேத்தன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

ஆனால் கடந்த 18ம் தேதி கேத்தன் தனது வருங்கால மனைவி சியா கோயலுடன் புனே அருகே லோகாகட் என்கிற கோட்டைக்கு மலையேற்றம் செய்திருக்கிறார்.

அப்போது பள்ளத்தாக்கத்தின் விளிம்பில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது சேத்தன் கால் தவறி கீழே விழுந்துவிட்டதாக சியா கோயல் போலீசாரிடம் கூறினார்.

ஆனால் விசாரணையில் சேத்தன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சியா கோயல்ல் சேத்தன் சவுத்ரி என்பவரை காதலித்திருக்கிறார்.

கேத்தன் அகர்வாலுடனான திருமணத்தில் விருப்பம் இல்லாததால் கேத்தனை கொலை செய்து விட சியா கோயலும், அவரின் காதலனும் திட்டமிட்டுள்ளனர். சியா கோயலும்,

அவரது காதலன் சேத்தன் சவுத்ரியும் இணைந்து கேத்தனை பள்ளத்தாக்கில் தள்ளி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்த சியா கோயலின் தந்தை பிரவீன் கோயல், ‘குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்று கூறினார். கேதனை என் மகன் போல நினைத்தேன்.. மிகவும் நல்ல பையன்.. என் மகள் விருப்பம் இல்லை என்று சொல்லியிருந்தால் திருமணத்தை நிறுத்தியிருப்பேன்..

சியா தரப்பு இந்த தவறை செய்திருந்தால் கேத்தன் விழுந்த அதே கோட்டையிலிருந்து அவளையும் கீழே தள்ளி விட வேண்டும்’ என அவர் கூறியிருக்கிறார்.