வட்ஸ்அப் செய்தியால் 90 லட்சம் ரூபாயை பறிகொடுத்த பெண் : மக்களே அவதானம்!!

23

வாட்ஸ்அப் சமூக ஊடக வலைத்தளம் வழியாகச் செயல்பட்ட ஒரு மோசடியான இணையவழி முதலீட்டுத் திட்டத்தில் சிக்கி, ஓய்வுபெற்ற பொறியாளரான பெண் ஒருவர் 90 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை இழந்துள்ள சம்பவம் ஒன்ரு இடம்பெற்றுள்ளது.

இலங்கை கணினி அவசர காலப் பிரிவுதகவலின்படி, பாதிக்கப்பட்ட பெண் நாட்டின் பொது மற்றும் தனியார் துறைகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர் ஆவார்.

இவர் ஒரு பிரபலமான குடியிருப்பு வளாகத்தில் சொந்தமாக வீடு வைத்திருந்ததோடு, 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வங்கி வைப்புத்தொகையையும் கொண்டிருந்தார்.

இணையவழி வங்கிச் சேவை மற்றும் போக்குவரத்துச் செயலிகள் போன்ற நவீன தொழில்நுட்பக் கருவிகள் குறித்து நல்ல புரிதல் கொண்டவராகவும் இருந்தபோதிலும், முதலீட்டு ஆலோசகர்களாக வேடமணிந்த மோசடிக்காரர்களின் ஒரு திட்டமிட்ட வலையில் இவர் சிக்கிக்கொண்டார்.

முதலீடு செய்யப்படும் பணம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் இருமடங்காகப் பெருகும் என்று கூறும் சமூக ஊடக வலைத்தளம் ஊடாக இந்த நிதி மோசடி தொடங்கியதாகக் கணினி அவசர காலப் பிரிவு கூறியுள்ளது.

அதிக வருமானம் கிடைக்கும் என்பதை நம்பி அவர் பணத்தை முதலீடு செய்யத் தொடங்கி இன்று பெருமளவு பணத்தை குறித்த பெண் இழந்துள்ளார். பல தவணைகளில் அவர் செய்த மொத்த முதலீடு சுமார் 10 மில்லியன் ரூபா என கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறை (CID) ஊடாக , விரிவான விசாரணைகள் நடைபெற்று வருகின்றதாக கூறப்படுகின்றது.

அதேவேளை சமூக வலைத்தள மோசடிகாள் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களுக்கு அடிக்கடி எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில் , மக்கள் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.