தினமும் 1ஒரு வாழைப்பழம் வீதம் 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

25

காலை உணவாக இருக்கட்டும் அல்லது மாலை நேர சிற்றுண்டியாக இருக்கட்டும், உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்க வாழைப்பழத்தை விட சிறந்த தேர்வு வேறு எதுவும் இருக்க முடியாது.

இந்தச் சூழலில், ஒரு நபர் தினமும் ஒரு வாழைப்பழம் வீதம் தொடர்ந்து 45 நாட்கள் சாப்பிட்டு வந்தால், அவருடைய உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

விலை மலிவாகவும், வருடத்தில் 365 நாட்களும் தடையின்றி கிடைக்கக்கூடிய ஒரு முழுமையான இயற்கை உணவாக வாழைப்பழம் திகழ்கிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இந்த எளிய பழத்தில், உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

தினமும் ஒரு வாழைப்பழம் வீதம் தொடர்ந்து 45 நாட்கள் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நம் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்களை பார்க்கலாம்.

சீரான ரத்த அழுத்தம்

வாழைப்பழத்தின் மூலம் உடலுக்கு கிடைக்கும் பொட்டாசியம், ரத்த அழுத்தத்தை ஆரோக்கியமான வரம்பில் பராமரிக்க உதவக்கூடும். மேலும், தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாட்டை சீராக்குவதோடு உடலின் நீர்ச்சத்தை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது.

மேம்பட்ட செரிமானம்

வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலை குறைக்க உதவக்கூடும். மேலும் குடல் நுண்ணுயிரிகளின் ஆரோக்கியத்தை ஆதரித்து, ஒட்டுமொத்த செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவலாம்.

இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தமனிகளில் கொழுப்பு படிவதை தடுத்து இதயம் சீராக இயங்க உதவுகிறது.

பொட்டாசியம் தாது, இதயத் தசைகளின் சுருங்கி விரியும் தன்மையை சீராக வைப்பதன் மூலம் இதயத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது.