ஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகள்!!

594

Baby

இந்திய மணிப்பூரில் பெண்மணி ஒருவர் 10 நிமிட இடைவெளியில் 5 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். மணிப்பூர் மாநிலத்தின் பிஷ்னுபூர் மாவட்டத்திற்குட்பட்ட தங்க சமுக்கோல் கிராமத்தில் வசித்து வருபவர் 35 வயதான கீதா. நான்கு குழந்தைகளுக்கு தாயான அவர் மீண்டும் கர்ப்பமடைந்தார்.

இந்நிலையில் அவருக்கு பிரசவவலி ஏற்பட்டதையடுத்து, அப்பகுதியில் உள்ள பிராந்திய அறிவியல் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ஒன்றன் பின் ஒன்றாக நான்கு அழகான பெண் குழந்தைகளையும், ஒரு அழகான ஆண் குழந்தையையும் பத்து நிமிட இடைவெளியில் பெற்றெடுத்துள்ளார்.

அதில் ஒரு பெண் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டது. முதலில் பிறந்த பெண் குழந்தையும் மூன்றாவதாக பிறந்த ஆண் குழந்தையும் ஆரோக்கியமாக உள்ள நிலையில், 800 கிராம் மற்றும் 900 கிராம் எடைகொண்ட மேலும் இரு பெண் குழந்தைகள் அவரச சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.