வவுனியா பூந்தோட்டம் சனசமூக நிலைய வருடாந்த விளையாட்டுப் போட்டிகள் 2026!!

26

வவுனியா பூந்தோட்டம் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில், அப்பகுதி மக்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும், பாரம்பரிய விளையாட்டுகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் நடாத்தப்படும் வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள் எதிர்வரும் 2026 ஜூன் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளன.

வவுனியா, பூந்தோட்டத்தில் அமைந்துள்ள லயன்ஸ் விளையாட்டு மைதானத்தில் காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை இவ்விளையாட்டு விழா மிக விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்விழாவில் அனைத்து வயதினருக்குமான பொதுவான போட்டிகள் மற்றும் சிறுவர்களுக்கான பிரத்தியேக போட்டிகள் எனப் பல சுவாரசியமான நிகழ்வுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மரதன் ஓட்டம், சறுக்கு மரம் ஏறுதல், முட்டி உடைத்தல், தலையணைச் சண்டை, பலூன் உடைத்தல், 100 மீற்றர் ஓட்டம், சாக்கோட்டம், பணீஸ் சாப்பிடுதல் மற்றும் சங்கீதக் கதிரை ,

5 – 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான போட்டிகளான 25 மீற்றர் ஓட்டம், தண்ணீர் நிரப்புதல், முயல் ஓட்டம், தாரா நடை, தவளைப் பாய்ச்சல், 3 நிமிட பேச்சுப் போட்டி மற்றும் நிறம் பிரித்தல் என்பன இடம்பெறவுள்ளன

இப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்கள் மற்றும் பதிவுகளுக்கு 076 6478788 , 070 7556788 என்ற தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொள்ள முடியும்

பூந்தோட்டம் சனசமூக நிலையத்தினர், கிராம மக்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் இவ்விளையாட்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றனர்.