வவுனியாவில் வேன் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இருவர் படுகாயம்!!

542

வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து நேற்று (26.06.2026) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஈரற்பெரியகுளம் சந்தியினை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

ஏ9 வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேனும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த மோதலின் காரணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளாகினர்.

காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நிகழ்ந்த இடத்திற்கு விரைந்த ஈரற்பெரியகுளம் போக்குவரத்து பொலிஸார், விபத்துக்குள்ளான வாகனங்களை கைப்பற்றியுள்ளதுடன், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.