பிரபுதேவா 2ம் திருமணம் : பெண் நடன இயக்குனருடன் காதல்!!

541

prabhu deva

பிரபுதேவாவுக்கும் பெண் நடன இயக்குனருக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் வட இந்திய பத்திரிகைகளில் பரபரப்பு செய்தி பரவி உள்ளது.

பிரபுதேவா இந்தியில் முன்னணி இயக்குனராக உள்ளார். அக்ஷய்குமாரை வைத்து ரவுடிரத்தோர், சல்மான்கான் நடித்த வாண்டட் படங்களை இயக்கினார். இவை வெற்றிகரமாக ஓடி 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டின. தற்போது அஜய் தேவ்கான், சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் ஆக்ஷன் ஜாக்ஷன் படத்தை இயக்கி வருகிறார். விரைவில் இது வெளிவர உள்ளது.

பிரபுதேவாவும், நயன்தாராவும் ஏற்கனவே காதலித்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர். இதற்காகவே முதல் மனைவியை விவாகரத்து செய்தார். ஆனால், கடைசி நேரத்தில் திருமணம் நின்று போனது. இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். தற்போது இந்தி பட வேலைகளில் பிசியாக இருக்கிறார்.

இந்த நிலையில்தான் பெண் நடன இயக்குனர் ஒருவருக்கும் பிரபுதேவாவுக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அந்த நடன இயக்குனர் என்ற விவரம் தெரியவில்லை.