மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!!

87

நாட்டில் இன்றைய தினம் (27.06.2026) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி 24 கரட் தங்க பவுண் ஒன்று 5000 ரூபாயால் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது 24 கரட் தங்க பவுண் ஒன்று 386000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை 22 கரட் தங்க பவுண் ஒன்று 5000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 355,200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அதற்கமைய 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.