தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு அத்தை நிகழ்த்திய கொடூரம்!!

25

ராமநாதபுரத்தில் பொறாமையின் காரணமாக 5 வயது சிறுமியை சொந்த அத்தையே கிணற்றில் தூக்கி போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ராமநாதபுரம் எம்.எஸ்.கே நகரில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த 5 வயது சிறுமி சமீபத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில்தான் தற்போது திடீர் திருப்பமாக சிறுமியின் சொந்த அத்தை கைது செய்யப்பட்டிருக்கிறார்.

தனது மாமனார், மாமியார் இருவரும் உயிரிழந்த சிறுமியிடம் அதிக பாசம் காட்டியதாலும், தனக்கு பிறந்த பெண் குழந்தை மாற்றுத்திறனாளி என்பதாலும் பொறாமையால் சிறுமையை கிணற்றில் தூக்கிப்போட்டு கொலை செய்ததாக விசாரணையில் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இது ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.