வீட்டின் அறைக்குள் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவன்!!

195

அம்பாந்தோட்டை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று வந்த மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாணவர் தங்கியிருந்த வீட்டின் அறையொன்றில் அவரது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 27 வயதுடைய மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரமெட்டிய பகுதியை சேர்ந்த கருசிங்ககே கவீந்திர சந்தருவன் எனும் தாதியர் மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் கடந்த 28ஆம் திகதி மாலை 4 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது. அத்துடன், பிரேத பரிசோதனைக்காக அம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மாணவன் உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை நேற்று நடைபெறவிருந்தது. சம்பவம் தொடர்பில் அம்பாந்தோட்டை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.