Samsung Galaxy Ring 2 குறித்து வெளியான முக்கிய தகவல்!!

19

Samsung நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஸ்மார்ட் மோதிரமான Galaxy Ring 2 உருவாக்கப்பட்டு வருவதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான முதல் Galaxy Ring-க்கு பிறகு, அதன் புதிய பதிப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது Samsung நிறுவனம் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

Samsung நிறுவனத்தின் Digital Health பிரிவுத் தலைவர் ஹான் பாக் (Dr. Hon Pak), Galaxy Ring 2 தற்போது உருவாக்கப்பட்டு வருவதாகவும், அதில் iPhone இணைப்பு (iOS Support) வழங்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை Galaxy Ring, Android சாதனங்களுடன் மட்டுமே செயல்பட்டு வந்தது. எனினும், Samsung Health மற்றும் Galaxy Wearable செயலிகள் iPhone-களுக்கும் வழங்கப்பட்டால், Galaxy Ring 2-ஐ iPhone பயனர்களும் முழுமையாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய Galaxy Ring 2-ல், மேம்பட்ட ஆரோக்கிய கண்காணிப்பு தொழில்நுட்பம், அதிக துல்லியமான தரவுகள் மற்றும் நீண்டகால பேட்டரி ஆயுள் உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Samsung Health செயலி மூலம் இரத்த ஒக்சிஜன் அளவு, இதயத் துடிப்பு, தூக்கத்தின் தரம் மற்றும் உடற்பயிற்சி செயல்பாடுகள் உள்ளிட்ட உடல்நலத் தகவல்களை தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

மேலும், 2027ஆம் ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் AI Health Coaching வசதி, பயனர்களின் அன்றாட பழக்கவழக்கங்களை பகுப்பாய்வு செய்து, தனிப்பயனாக்கப்பட்ட உடல்நல ஆலோசனைகள் மற்றும் ஊக்குவிப்புகளை வழங்கும் என Samsung தெரிவித்துள்ளது.

அதோடு, நிறுவனத்தின் SmartThings தளத்துடன் ஒருங்கிணைத்து, பயனர்களின் உணவுப் பழக்கங்களை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் மற்றும் ஆரோக்கியமான சமையல் ஆலோசனைகளையும் வழங்கும் திட்டம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.