
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (02.07.2026) பவுணுக்கு 5,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று (01) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 379,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 384,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 353,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,163 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.





