நள்ளிரவு இடம்பெற்ற கோர விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி – இருவர் கவலைக்கிடம்…………!!

28

காலி – கொழும்பு பிரதான வீதியின் பயாகல, கட்டுகுருந்த பகுதியில் பேருந்து ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கட்டுகுருந்த பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவரும், சிறுவன் ஒருவருமே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, களுத்துறை கட்டுகுருந்த பிரதான பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டு மீண்டும் பயணத்தை ஆரம்பித்த போது,

எதிரே வந்த முச்சக்கரவண்டி திடீரென பேருந்தின் முன்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்துள்ளதுடன், அவர்கள் காயமடைந்த நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது 62 வயதுடைய பாட்டியும் 12 வயதுடைய பேரனும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் தாத்தாவே முச்சக்கரவண்டியை செலுத்தியுள்ளதுடன், அவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேருவளை பகுதியில் பொசன் வலயத்தைப் பார்வையிட்டுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டியை செலுத்தியவருக்கு நித்திரை ஏற்பட்டமையினாலேயே இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதேவேளை, விபத்து நடந்த தருணத்தில் பேருந்தில் இருந்த பயணி ஒருவர், சாரதியின் அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்த பையை திருடிச் சென்றுள்ளமை சிசிடிவி (CCTV) கமராவில் பதிவாகியுள்ளது.