
யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் புனித தலம் வரை செல்லும் வருடாந்த பாத யாத்திரையில் தானாகவே இணைந்து கொண்ட சுப்பிரமணியம் என அழைக்கப்படும் நாய்க்கு விசேட பாதுகாப்பு வாகனம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உகந்த முதல் கதிர்காமம் வரையிலான பயணத்தின் போது விசேட வாகனமொன்றில் அந்த நாயை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல அதன் பாதுகாவலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
சுப்பிரமணியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சுப்பிரமணியின் பாதுகாப்பு
கதிர்காமம் வரையான பாதயாத்திரையின் போது, பக்தர்கள் குமுன தேசிய பூங்கா மற்றும் யால தேசிய பூங்கா ஊடாகப் பயணிக்க வேண்டியுள்ளது.
இந்த வனப்பகுதிகளில் சிறுத்தைகள் போன்ற ஆபத்தான விலங்குகளால் நாய்க்கு ஆபத்து ஏற்படலாம். இதனால் இந்தப் பகுதிக்கு மட்டும் வாகனத்தில் அழைத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சுப்பிரமணியம் தற்போது 43 நாட்களாக பாத யாத்திரையில் பக்தர்களுடன் இணைந்து பயணித்து வருகின்றது.
முன்னதாக கல்முனையில் ஏற்பட்ட சம்பவத்திற்கு பின்னர் தற்போது ஆரோக்கியமான உடல் நிலையுடன் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பதாக விலங்கு நலச் சங்கம் தெரிவித்துள்ளது.





